திருநெல்வேலியில் அரசு பஸ்களுக்கு இணையாக தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. அரசு பஸ்கள் கட்டணமின்றி இயக்கப்படுவதால் தற்போது பயணிகள் கூட்டம் இன்றி தனியார் பஸ்கள் மிகுந்த வருவாய் இழப்பை சந்திக்கின்றன.
வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்புப் பணிகளுக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் 92 போலீசார் பயிற்சி பெற்று, ஐந்து உட்கோட்டங்களில் தலா 5 மீட்பு குழுக்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
எல்நினோ தாக்கத்தால் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போதிய மலை இன்றி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை (மொத்த உயரம் 118 அடி) தற்போது நீர்மட்டம் 65 அடியாக சரிவு.