கோவையில் பெய்து வரும் மழையினால் நீர் நிலைகளில் மழை நீர், மீன்களின் வரத்து அதிகரித்துள்ளதால் கூழைக்கடா பறவை வாலாங்குளத்திற்கு அதிக அளவில் வருகை தருகின்றன.
மதுரையில் நடந்த தினமலர் துணை செய்தி ஆசிரியர் எழிலரசன் (வலது ஓரம்), ஜெயசுதா இல்ல திருமண வரவேற்பு விழாவில் மணமக்கள் பாலமுரளி-தீபா. இடமிருந்து மணமகள் சித்தப்பா தினகரன், சித்தி ஜீவராணி, மணமகன் சகோதரி அமிர்தவர்ஷினி -ராஜேஷ் விஷ்ணு.
மதுரை அழகர்கோவில் ரோடு சூர்யா நகர் பகுதியில் மினி வேனில் பாதுகாப்பின்றி எடுத்துவரப்பட்ட இரும்பு பைப்கள் தவறி ரோட்டில் விழுந்தன. நல்லவேளையாக வாகன ஓட்டிகள் உயிர் தப்பினர்.
திருவண்ணாமலைக்கு , ஆந்திரா மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வருவது அதிகரித்து வருகிறது.அப்படி வருபவர்கள் பதினாறு கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில், தங்களது மழலைச் செல்வங்களையும் சிறு வண்டிகளில் அமர வைத்துக் கொண்டு வலம் வருவது தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பக்தியைக் காட்டுகிறது.