முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்காக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜரான திமுக எம் பி ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் மா சுப்ரமணியன்.இடம் : சைதாப்பேட்டை
மதுரையில் நடந்த தினமலர் துணை செய்தி ஆசிரியர் எழிலரசன் (வலது ஓரம்), ஜெயசுதா இல்ல திருமண வரவேற்பு விழாவில் மணமக்கள் பாலமுரளி-தீபா. இடமிருந்து மணமகள் சித்தப்பா தினகரன், சித்தி ஜீவராணி, மணமகன் சகோதரி அமிர்தவர்ஷினி -ராஜேஷ் விஷ்ணு.
மதுரை அழகர்கோவில் ரோடு சூர்யா நகர் பகுதியில் மினி வேனில் பாதுகாப்பின்றி எடுத்துவரப்பட்ட இரும்பு பைப்கள் தவறி ரோட்டில் விழுந்தன. நல்லவேளையாக வாகன ஓட்டிகள் உயிர் தப்பினர்.
திருவண்ணாமலைக்கு , ஆந்திரா மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வருவது அதிகரித்து வருகிறது.அப்படி வருபவர்கள் பதினாறு கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில், தங்களது மழலைச் செல்வங்களையும் சிறு வண்டிகளில் அமர வைத்துக் கொண்டு வலம் வருவது தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பக்தியைக் காட்டுகிறது.