108 வேலுக்கு பூஜை...மேட்டுப்பாளையம் ராஜீவ் நகர் ராஜகணபதி ஆலயத்தில் திருவிளக்குடன் 108 வேல் வழிபாடு நடத்தினர். சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
ஆந்திரப் பிரதேசம் விசாகப்பட்டினத்தில், ‘அர்னாப்’ எனப்படும் தீவிரப் புயல் கரையை நெருங்குவதை ஒட்டி, அப்பகுதி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கடற்கரைப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, ராட்சத அலைகளும் அடித்து வருகின்றன.