எல்நினோ தாக்கத்தால் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போதிய மலை இன்றி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை (மொத்த உயரம் 118 அடி) தற்போது நீர்மட்டம் 65 அடியாக சரிவு.
புதுச்சேரியில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நேர்மையே வளமைக்கான வழி என்ற கருத்தை வலியுறுத்தி கடற்கரை சாலையில் மாணவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம் நடந்தது.
நத்தம் என்.பி.ஆர்., கல்வி குழுமத்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் கலெக்டர் துர்காவை கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சரவணன் வரவேற்றார். அருகில் இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் செல்வபெருமாள், முதன்மைக் கல்வி அலுவலர் செல்வகுமார்.
சிறுமுகை அருகே தென் பொன்முடி அருள்மிகு கரிய மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பட்டக்காரனூர் கிராம மக்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் சாஜப்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கருமான் மான்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவை கூட்டமாக வந்து பயிர்களை தின்று நாசம் செய்வதால், அப்பகுதி விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டு வந்தது.இதன் காரணமாக இங்குள்ள மான்களை குனோ தேசியப் பூங்காவிற்கு வனத்துறையினர் மாற்றிவருகின்றனர்,புதிய இடத்திற்கு துள்ளிக்குதித்து வரும் மான்கள்.
ஸ்பெயின் நாட்டின் உர்தா பகுதியில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்து நடந்த இடத்தில், அவசரகால மீட்புப் பணிக்குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.