அர்னாப் புயல் காரணமாக சென்னை எண்ணூர் குடியிருப்பு பகுதியில் அடித்து வரப்பட்ட கற்கள் மணல்களை அகற்றும் குடியிருப்பு வாசிகள். இடம்: வடக்கு தனியார் நகர் 4வது தெரு.
அர்னாப் புயல் காரணமாக சென்னை எண்ணூர் பாரதியார் நகர் பகுதியில் கடல் சீற்றத்தால் அடித்து வரப்பட்ட மணல்களை தூய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கக்கடலில் உருவான அர்னாப் புயல் ஆந்திராவில் கரையை கடக்கும் நிலையில், நேற்றிரவு சென்னை எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்புப் பணிகளுக்காக திருநெல்வேலி மாவட்டத்தில் 92 போலீசார் பயிற்சி பெற்று, ஐந்து உட்கோட்டங்களில் தலா 5 மீட்பு குழுக்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.
எல்நினோ தாக்கத்தால் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போதிய மலை இன்றி திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணை (மொத்த உயரம் 118 அடி) தற்போது நீர்மட்டம் 65 அடியாக சரிவு.