சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.
முரசு புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் காரணமாக இரண்டாவது நாளாக சென்னை திருவெற்றியூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் திறந்துள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்களன்று மக்கள் குறைதீர்க்க கூட்டத்திற்கு மனு கொடுக்க வருவார்கள். முரசு புயல் காரணமாக குடையுடன் வந்த பொதுமக்கள்.
பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய மாணவிகள்.