தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ரஷ்ய கூட்டமைப்பின் தலைவர் வியாசெஸ்லாவ் வோலோடின், நம் நாட்டின் துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனை நேற்று சந்தித்தார். இடம்: பார்லிமென்ட் வளாகம், புதுடில்லி.
28-Oct-2026

ShareTweetShareShare

2/

ஒடிசா மாநிலம் புரி பகுதியில் ‘அர்னாப்’ புயல் காரணமாக வீசிய பலத்த சூறாவளிக் காற்று மற்றும் கனமழையின் காரணமாக, கரையோரத் தென்னை மரங்கள் பலமாகச் சாய்ந்து ஆடின.
28-Oct-2026

3/

இதே வேலையா போச்சு... மதுரை பைபாஸ் ரோடு நேரு நகர் சர்வீஸ் ரோட்டோரத்தை ஆக்கிரமித்துள்ள தள்ளுவண்டி கடைகள்.
28-Oct-2026

4/

போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து ரகளை செய்ததாகவும், போலீஸ் அதிகாரிகளை தாக்கியதாகவும் போலீஸ் உதவி கமிஷனர் மனஸ்வி வசிஷ்ட் கொடுத்த புகார்படி, 20 வழக்கறிஞர்கள் மீது ஷாஹ்தாரா போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசின் இந்த செயலைக் கண்டித்து டில்லியில் நேற்று முன் தினம் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இந்நிலையில், வழக்கறிஞர்களிடன் அத்துமீறிய உதவி கமிஷனர் மனஸ்வி வசிஷ்டா, ஷாஹ்தாரா இன்ஸ்பெக்டர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, டில்லி வழக்கறிஞர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று அறிவித்தது. புதுடில்லி வழக்கறிஞர்கள் சங்க செயலர் தருண் ராணா தலைமையில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நேற்று கூடி நின்று கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
28-Oct-2026

5/

வேளச்சேரி வீரங்கால் ஓடையில் சேர்ந்து நிற்கும் களிமண் கழிவுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள்.இடம் : வேளச்சேரி
28-Oct-2026

6/

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் பயணிகள் வெளியே செல்லும் படிக்கட்டுகளின் உள்ளே சேர்ந்து நிற்கும் குப்பை கழிவுகளில் மழைநீர் சேர்ந்து கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.இடம் : திருவான்மியூர்
28-Oct-2026

7/

திருப்பூர், சைமா அரங்கில் பி.எப்., விழிப்புணர்வு கூட்டத்தில் அமலாக்கப் பிரிவு அலுவலர் கிருஷ்ணகுமார் பேசினர். அருகில் சைமா துணைத் தலைவர் பாலச்சந்தர்,இணைச் செயலாளர் பொன்னுச்சாமி.
28-Oct-2026

8/

கூட்டம் இல்லாமல் செல்லும் ப்ரைவேட் பஸ். இடம்: டவுன் பஸ் ஸ்டான்ட், காந்திபுரம்
28-Oct-2026

9/

தற்போது பெய்து வரும் மழையில் பச்சை பசேலென மாறி குளிர்ச்சியூட்டும் பொள்ளாச்சி ஆனைமலை ரோடு.
28-Oct-2026

10/

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் உள்ள சேதமடைந்த சமூதாய கூட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
28-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us