கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சாலை ஓரம் உள்ள சில மரங்களில் பட்டுப்போன கிளைகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள்.
கோவிலுக்குள் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்து கொண்டு செல்ல வேண்டுமென உத்தரவை மீறி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த நடிகர் ராகவா லாரன்சை சூழ்ந்து செல்பி எடுத்த ரசிகர்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பேருந்து நிலையம் அருகே நூறு ஆண்டு பழமை வாய்ந்த ஆதி பெத்தப்பல்லி கெங்கையம்மன் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு, எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கோவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிய பாரா பேட்மிட்டன் போட்டியில் ஒரு தங்க இரண்டு வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை துளசி மதிக்கு ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் வழங்கி பாராட்டினார். இடம்.நேரு உள் விளையாட்டு அரங்கம்.
குப்பையில் கிடந்த மூன்று சவரன் தங்கச் செயினை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு விருத்தாசலம் எம்எல்ஏ அலுவலகத்தில் மாவட்ட கழக செயலாளர் சிவக்கொழுந்து சால்வை அணிவித்து பரிசு தொகை வழங்கினார்.