திருவண்ணாமலைக்கு , ஆந்திரா மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வருவது அதிகரித்து வருகிறது.அப்படி வருபவர்கள் பதினாறு கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில், தங்களது மழலைச் செல்வங்களையும் சிறு வண்டிகளில் அமர வைத்துக் கொண்டு வலம் வருவது தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பக்தியைக் காட்டுகிறது.
திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக கொண்டாடப்படும் பண்டிகையே ‘கர்வா செளத்’ ஆகும்.வட மாநிலங்களில் பிரபலமான இந்த பண்டிகையை கொண்டாடிய பெண்கள் மெகந்தியிட்ட தங்கள் கைகளை காட்டி மகிழ்ந்தனர். இடம்:டோராடூன்,உத்தரசகண்ட்
டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசின் அளவு அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டிடப் பணிகள் நடக்கும் இடத்தில் காற்று மாசு கட்டுப்படுத்த தண்ணீர் தெளிப்பான் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இடம். குருதுவார சாலை , சௌத் அவன்யூ, டில்லி.