திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக கொண்டாடப்படும் பண்டிகையே ‘கர்வா செளத்’ ஆகும்.வட மாநிலங்களில் பிரபலமான இந்த பண்டிகையை கொண்டாடிய பெண்கள் மெகந்தியிட்ட தங்கள் கைகளை காட்டி மகிழ்ந்தனர். இடம்:டோராடூன்,உத்தரசகண்ட்
மதுரை அழகர்கோவில் ரோடு சூர்யா நகர் பகுதியில் மினி வேனில் பாதுகாப்பின்றி எடுத்துவரப்பட்ட இரும்பு பைப்கள் தவறி ரோட்டில் விழுந்தன. நல்லவேளையாக வாகன ஓட்டிகள் உயிர் தப்பினர்.
திருவண்ணாமலைக்கு , ஆந்திரா மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வருவது அதிகரித்து வருகிறது.அப்படி வருபவர்கள் பதினாறு கிலோமீட்டர் தூரம் கொண்ட கிரிவலப் பாதையில், தங்களது மழலைச் செல்வங்களையும் சிறு வண்டிகளில் அமர வைத்துக் கொண்டு வலம் வருவது தலைமுறை தலைமுறையாகத் தொடரும் பக்தியைக் காட்டுகிறது.