தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

பூங்கா இல்லாவிட்டாலும், சாலையோரத்தில், பெற்றோரின் பார்வையில் மகிழ்ச்சி குறையாமல் விளையாடும் குழந்தைகள். இடம் : கோவை, ரயில்நிலையம் அருகே
30-Oct-2026

ShareTweetShareShare

2/

பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் வடக்கு பாஜ கட்சி சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் நடந்தது. அதில் பங்கேற்ற பெண்கள்.
30-Oct-2026

3/

பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் வடக்கு பாஜ கட்சி சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் நடந்தது. அதில் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட மெகா கரப்பான் பூச்சி பொம்மை.
30-Oct-2026

4/

திருப்பூர் மாநகருக்கு மத்தியில் ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம் வெயில் கூட உள்ளே நுழைய முடியாத அளவு அடர்த்தியாக மரங்கள் வளர்ந்துள்ள ஈஸ்வரமூர்த்தி பூங்கா.
30-Oct-2026

5/

உடுமலை நேதாஜி மைதானத்தில் சேதம் அடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள்.
30-Oct-2026

6/

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கலெக்டர் பத்மஜா மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
30-Oct-2026

7/

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான அரசு மானியம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. அமைச்சர் ராஜ்மோகன் மானியங்களை வழங்கினார். இடம்: சேப்பாக்கம்.
30-Oct-2026

8/

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு கிழக்கு தொகுதி த.வெ.க., எம்.எல்.ஏ., கார்த்திகேயன் தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார்.
30-Oct-2026

9/

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் மதன்ராஜாவை மதுரை விமான நிலையத்தில் முதுகுளத்துார் சட்டசபை தொகுதி த.வெ.க., நிர்வாகி டாக்டர் முருகராஜா சால்வை அணிவித்து வரவேற்றார்.
30-Oct-2026

10/

உலக பக்கவாத தினத்தையொட்டி, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனை சார்பில், ‘ஸ்ட்ரைடு பார் ஸ்ட்ரோக்’ என்று பெயரிடப்பட்ட குடையுடன் விழிப்புணர்வு நடைபயணம் நேற்று நடந்தது. பக்கவாதத்தில் இருந்து மீண்டவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியை நடிகை ரம்யா சுப்பிரமணியன், நரம்பியல் அறுவை சிகிச்சை டாக்டர் ரூபேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
30-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us