பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் வடக்கு பாஜ கட்சி சார்பில் தேசியக்கொடி ஊர்வலம் நடந்தது. அதில் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட மெகா கரப்பான் பூச்சி பொம்மை.
காரமடை அருகே ஸ்ரீ விநாயகா வித்யாலயா பள்ளியின் முன்னாள் மாணவன் ராகுல் தனது சான்றிதழில் பிறந்த தேதி தவறாக இருப்பதை திருத்தம் செய்ய கோரி, கருப்புக் கொடி உடன் பள்ளியின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கலெக்டர் பத்மஜா மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கான அரசு மானியம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. அமைச்சர் ராஜ்மோகன் மானியங்களை வழங்கினார். இடம்: சேப்பாக்கம்.
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு கிழக்கு தொகுதி த.வெ.க., எம்.எல்.ஏ., கார்த்திகேயன் தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார்.