தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கலைஞர் ஒருவர், அந்த ஊர் வழக்கப்படி வழிபாட்டுக்கு பயன்படுத்தக்கூடிய பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட ‘தொந்துலு’ எனப்படும் அலங்காரக் களிமண் பானைகளுக்கு வர்ணம் தீட்டினார்..
30-Oct-2026

ShareTweetShareShare

2/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, அம்மணி அம்மன் கோபுர நுழைவாயில் பகுதியில் தண்ணீரை பீச்சி அடித்து சுத்தம் செய்யும் பணியில் கோவில்கள்.
30-Oct-2026

3/

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ ரத்ததான விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்ற மருத்துவ கல்லூரி மாணவர்கள்
30-Oct-2026

4/

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பில், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு பதாகை உடன் பேரணி சென்ற கல்லூரி மாணவிகள்.
30-Oct-2026

5/

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பாவூர் ஏரியில் மண் எடுப்பதை தடுக்க வலியுறுத்தி, மாங்கால் கூட்ரோட்டில் மனித சங்கிலி போராட்டம் ஈடுபட்ட கிராம மக்கள்.
30-Oct-2026

6/

திருவண்ணாமலை 18 கிராம ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைத்ததை திரும்ப பெற வேண்டி தென்னரசம்பட்டு பகுதியில், 51வது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்.
30-Oct-2026

7/

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால் குண்டாறு அணை அதன் முழு கொள்ளளவான 36 அடியை எட்டியது.இதில் தடையை மீறி ஆபத்தை உணராமல் குளிக்கும் இளைஞர்கள்.
30-Oct-2026

8/

வளிமண்டல ஆய்வுக் கருவியை ஹீலியம் பலூன் வாயிலாக விண்ணில் ஏவும் நிகழ்ச்சி துடியலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்தது இதனை வியப்புடனும் ஆர்வத்துடன் கண்ட பள்ளி மாணவர்கள்.
30-Oct-2026

9/

திருப்பூர், காசிபாளையம் நொய்யல் ஆற்றிலிருந்து மாணிக்காபுரம் குளத்திற்கு செல்லும் கால்வாய் தூர்வாரும் பணி நடந்தது.
30-Oct-2026

10/

விழுப்புரம் காமராஜர் தெருவில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர் ஜவுளி கடையில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை முன்னிட்டு பலவித மாடல்களில் உள்ள சேலைகளை தேர்வு செய்து வாங்கும் வாடிக்கையாளர்கள்.
30-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us