தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

விழுப்புரம் காமராஜர் தெருவில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர் ஜவுளி கடையில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை முன்னிட்டு பலவித மாடல்களில் உள்ள சேலைகளை தேர்வு செய்து வாங்கும் வாடிக்கையாளர்கள்.
30-Oct-2026

ShareTweetShareShare

2/

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழையால் குண்டாறு அணை அதன் முழு கொள்ளளவான 36 அடியை எட்டியது.இதில் தடையை மீறி ஆபத்தை உணராமல் குளிக்கும் இளைஞர்கள்.
30-Oct-2026

3/

வளிமண்டல ஆய்வுக் கருவியை ஹீலியம் பலூன் வாயிலாக விண்ணில் ஏவும் நிகழ்ச்சி துடியலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்தது இதனை வியப்புடனும் ஆர்வத்துடன் கண்ட பள்ளி மாணவர்கள்.
30-Oct-2026

4/

திருப்பூர், காசிபாளையம் நொய்யல் ஆற்றிலிருந்து மாணிக்காபுரம் குளத்திற்கு செல்லும் கால்வாய் தூர்வாரும் பணி நடந்தது.
30-Oct-2026

5/

பாரதிய வித்யா பவன் உலகளாவிய அமைப்பின் துணை தலைவராக கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயருக்கு பாராட்டு விழா நடந்தது. இடம்: கோவை, ஆர்.எஸ்., பாரதி வித்யா பவன் பள்ளி
30-Oct-2026

6/

புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமி பட்டாசு கடையை திறந்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
30-Oct-2026

7/

நவம்பர் மாதம் முதல் தேதி புதுச்சேரியில் விடுதலை நாளை முன்னிட்டு சட்டசபை வளாகம் மின்விளக்கில் ஜொலிக்கிறது.
30-Oct-2026

8/

தொடங்கியது முன்பனிக் காலம் மார்கழியின் அதிகாலைகளில் மட்டுமே பழகிய கண்களுக்கு, இந்த ஐப்பசியிலேயே ஒரு பனிக்காட்சி! அவிநாசி அடுத்த ராமநாதபுரத்தில், மரங்களின் உச்சியைத் தொட்டு, பாதைகளின் வழியே இறங்கி, ஊரையே தன் மெல்லிய வெண்போர்வைக்குள் மூடியிருக்கிறது பனி. கார்த்திகை பிறப்பதற்கு முன்பே தொடங்கியிருக்கும் இந்தப் பனிப்பொழிவு, மக்களுக்கு இதமான குளிரைத் தந்தாலும், மாறிவரும் பருவநிலையின் முன்னறிவிப்பா என்ற கேள்வியையும் விட்டுச் செல்கிறது.
30-Oct-2026

9/

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள கலைஞர் ஒருவர், அந்த ஊர் வழக்கப்படி வழிபாட்டுக்கு பயன்படுத்தக்கூடிய பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட ‘தொந்துலு’ எனப்படும் அலங்காரக் களிமண் பானைகளுக்கு வர்ணம் தீட்டினார்..
30-Oct-2026

10/

கடுமையான மழையையும் திடீர் வெள்ளப்பெருக்கையும் ஏற்படுத்திய அர்னாப்’ புயலால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் பஞ்ஜநகரின் ஒரு பகுதி
30-Oct-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us