வட மாநிலத்தில் தீபாவளி பண்டிகையின் போது வீடுகளை ஒளிரவைக்கும் விளக்குகளுக்கு எப்போதும் முதன்மை இடம் உண்டு. மும்பையில் தீபாவளி திருநாளை முன்னிட்டு, வீடுகளை அலங்கரிக்க சாலைவோரக் கடைகளில் தொங்கவிடப்பட்டுள்ள கண்கவர் வண்ண விளக்குகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் பொதுமக்கள்.
குங்குமப்பூ தயாரிக்கப்படும் குரோக்கஸ் மலர்கள் ஜம்மு - காஷ்மீரில் அதிகளவில் விளைகிறது. ஸ்ரீநகர் அருகே பாம்பூர் கிராமத்தில் குரோக்கஸ் மலர் அறுவடை மும்முரமாக நடக்கிறது.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து சாக்கடை நீர் சுத்திகரிக்கப்படாமல் தாமிரபரணி ஆற்றில் நேராக கலப்பதால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நெல் சாகுபடி காண ஆரம்ப கட்ட பணிகளை விவசாயிகள் துவங்கியுள்ளனர். இடம்: சாம்பவர் வடகரை, தென்காசி.
சென்னை அண்ணா சாலை ஜெமினி மேம்பாலத்தில் வாகனம் ஒன்று பழுதாகி நின்றதால் தேனாம்பேட்டையில் இருந்து சேப்பாக்கம் வரை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள். இடம். ஆயிரம் விளக்கு
விலைவாசி உயர்வை கண்டித்து சென்னை பாரிமுனை குரலகம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன முறையில் காய்கறிகளை மாலையாக அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.