சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், அப்பகுதியில் உருவாகியுள்ள கரையான் பூச்சிகளை உண்ணும் ஆர்வத்துடன் தரையை முகர்ந்து தேடித் அலைகின்ற கரடி.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை வளாகத்தில் உலக விபத்து காய தினத்தை முன்னிட்டு, பேரிடர் சேதம் மீட்பு மற்றும் சிகிச்சை தொடர்பான ஒத்திகை பயிற்சியினை கலெக்டர் பத்மஜா துவங்கி வைத்து பார்வையிட்டார்.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊழல் மற்றும் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு உறுதிமொழியினை கலெக்டர் பத்மஜா தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.
சென்னை காந்தி மண்டபம் சாலையில் அரசு அலுவலர்கள் குடியிருப்பு சுவர்களில் பொதுமக்களை கவரும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வரையப்பட்டுள்ள அழகிய ஓவியங்கள்.இடம் : கோட்டூர்புரம்
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர், எவ்வித சுத்திகரிப்பும் இன்றி நேரடியாகத் தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது. இதனால் கடும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.