பழக்க, வழக்கம் மதுரை ரிங்ரோடு பாண்டிகோயிலில் விசேஷ நாளென்றாலும், விடுமுறை நாளென்றாலும் கோலாகல கூட்டமும், அதனால் நீள்வது நெரிசலும், அதன்பின் வாகன ஓட்டிகளுக்கு மனஉளைச்சலும் உருவாவது வழக்கம். இப்பிரச்னைக்கு தீர்வு காணாததுதான் அதிகாரிகளுக்கு பழக்கம்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இளைஞரணி சார்பில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் நிகழ்ச்சி சென்னை பெசன்ட் நகரில் நடந்தது.
சென்னையில் நண்பகலில் வீசிய பலத்த காற்றால் கடற்கரை சாலையில் தூசிபோல் அடித்து வரப்பட்ட கடல் மண். இதனால் முகத்தை மூடியபடி செல்லும் பொதுமக்கள். இடம்: பாலவாக்கம்.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள உயர் மின் கோபுரங்களில் ஓய்வெடுக்கும் கூழைக்கிடா பறவைகள் தவறுதலாக மின்சாரம் பாய்ந்து இறந்து விழும் நிலை அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.