வி.பி.ஜே ஜூவல்லர்ஸின் திறப்பு விழா, கோவை காந்திபுரம் 100அடி ரோட்டில் நேற்று நடந்தது. இதில் (இடமிருந்து) வி.பி.ஜே ஜூவல்லர்ஸின் நிர்வாகி உம்மிடி சண்முகபிரியா, சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையின் செயலாளர் பிரியா சதீஷ், நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், ஜூவல்லர்ஸின் நிர்வாக இயக்குநர்கள் ஜிதேந்திர உம்மிடி, அமரேந்திரன் உம்மிடி, சிதாஷ் உம்மிடி மற்றும் செயல் இயக்குநர் தியா உம்மிடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சுவாமி வீதி உலா வரும் வெள்ளி வாகனங்களுக்கு பாலிஷ் போடும் பணியில் பணியாளர்கள்.
பச்சை இலைகளின் நடுவே மெல்ல நகர்கிறது வெண்மேகம், தொட்டு தழுவும் குளிர்காற்றில் மரங்களின் வாசம் காற்றில் வீச இதமான இந்த சூழல் தந்திடுமே வாழ்க்கையின் ஆகச்சிறந்த நிம்மதி.
தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு செ ன்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கரகாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சி நடந்தது.
நாடு முழுதும் தீபாவளி பண்டிகை வரும் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கு முந்தைய கடைசி ஞாயிறு என்பதால் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்க சாலையோர கடைகளில் திரண்ட கூட்டம். இடம்: ஆமதாபாத், குஜராத்'