தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குறித்து உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான, குழுவினர் ஆய்வு செய்தனர். உடன் மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, கோவில் இணை ஆணையர் பரணிதரன் உட்பட பலர்.
கார்த்திகை தீபத் திருவிழா வரும் 24ஆம் தேதி அன்று திருவண்ணாமலை பகுதியில் உள்ள அனைத்து வீடுகளில் தீபஜோதியாய் ஜொலிக்க, அகல் விளக்குகள் தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்ட தொழிலாளர். இடம்: வேடந்தவாடி.
கடலூர் சுப்பராயலு ரெட்டியார் மண்டபத்தில் நடந்த ஹரித்ரா ஹரி சஹஸ்ரநாம அறக்கட்டளை ஆண்டு விழாவில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆன்மீக உபந்யாசம் நடந்தது.
டாஸ்மார்க் ஊழியர்கள் போராட்டம் காரணமாக சென்னை நகரில் டாஸ்மாக் கடைகள் திறக்காததால் திருவல்லிக்கேணி பாரதி சாலையில் உள்ள டாஸ்மார்க் கடையில் இன்றைக்காவது கடையை திறப்பார்களா? என காத்திருக்கும் மது பிரியர்கள்.
அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் பிகார் மாநிலம் புத்தகயாவிற்கு செல்ல உகந்த வானிலை நிலவும் காலமாகும். இந்தக் காலகட்டத்தில்தான் அதிகமான எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளும் பௌத்தத் துறவிகளும் வருகை தருவர். இந்த தொடக்கத்தைக் கொண்டாடும் விதமாக மகாபோதி கோயில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.