தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன் நுழைவு வாயிலில் பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
02-Nov-2026

ShareTweetShareShare

2/

மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடந்த விழாவில் ஆன்மிக பேச்சாளர் திருச்சி கல்யாணராமனுக்கு ஆஸ்திக சேவா ரத்னா விருதினை முன்னாள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார். இடமிருந்து சமாஜம் மேலாளர் சந்துரு, திருமோகூர் கோபால் பட்டர், அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு, முன்னாள் மதுரை மாவட்ட சேர்மன் இளங்கோவன்.
02-Nov-2026

3/

பரவை மங்கையர்க்கரசி குரு கல்வி நிறுவனத்தில் நடந்த விழாவில் தேசிய மாணவர் படை தலைவர் சங்கர குற்றாலிங்கத்திற்கு வீரமாராயம் விருதை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 28 வது பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி ராகேஷ் குமார் வழங்கினர். அருகில் சேர்மன் அசோக்குமார், ஸ்ரீஅருணாச்சல கல்வி அறக்கட்டளை தலைவர் அருணாச்சலம்.
02-Nov-2026

4/

மதுரை கே.கே நகரில் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தை கல்லாணை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். அருகில் முன்னாள் எம்.எல்.ஏ., பூமிநாதன், வெற்றிக் குமரன், லயன் சஞ்சய், எம்.எம்.ஆர். கார்டன் உரிமையாளர் முத்துராமன், உணவக உரிமையாளர்கள் அஞ்சப்பன் ரங்கசாமி, அஞ்சப்பன் கந்தசாமி, அஞ்சப்பன் மருது பாண்டியன்.
02-Nov-2026

5/

தாராபுரம் கிளாசிக் போலோவின் தீபாவளி சிறப்பு விற்பனையில் ஆடைகளை தேர்வு செய்த வாடிக்கையாளர்கள்.
02-Nov-2026

6/

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் காரணமாக இரண்டாவது நாளாக சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் குவிந்த மது பிரியர்கள்.
02-Nov-2026

7/

கோவை மருதமலை ரோட்டில் பாதாள சாக்கடை பணிகள் நடந்த இடத்தில் போடப்பட்டுள்ள வெட்மிக்ஸ்.
02-Nov-2026

8/

சென்னையில் பெய்து வரும் மழையினால் வியாசர்பாடி சுந்தரம் நகர் பிரதான சாலையில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர்.
02-Nov-2026

9/

சென்னையில் பெய்து வரும் மழையினால் வியாசர்பாடி ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் தேங்கியுள்ள மழைநீர்.
02-Nov-2026

10/

சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.
02-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us