மதுரை கே.கே நகரில் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தை கல்லாணை எம்.எல்.ஏ., திறந்து வைத்தார். அருகில் முன்னாள் எம்.எல்.ஏ., பூமிநாதன், வெற்றிக் குமரன், லயன் சஞ்சய், எம்.எம்.ஆர். கார்டன் உரிமையாளர் முத்துராமன், உணவக உரிமையாளர்கள் அஞ்சப்பன் ரங்கசாமி, அஞ்சப்பன் கந்தசாமி, அஞ்சப்பன் மருது பாண்டியன்.
சென்னை அண்ணா சாலை தலைமை மின்வாரிய அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக இருந்த ஆலமரம் வேரோடு சாய்ந்ததில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தது.
முரசு புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அரசு அறிவித்துள்ளதை தொடர்ந்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் காரணமாக இரண்டாவது நாளாக சென்னை திருவெற்றியூர் எல்லையம்மன் கோவில் பகுதியில் திறந்துள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள்.