தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

முதல்வரின் உருவம் பொறிக்கப்பட்ட பத்தமடை பாய் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வர் விஜய் கலந்துகொண்டு, மகளிர் சுய உதவிக்குழுக்களின் தயாரிப்புப் பொருட்கள் அடங்கிய அரங்குகளைப் பார்வையிட்டார். அப்போது, அரங்கில் இருந்த பெண்மணி ஒருவர், முதல்வரின் உருவத்தை கொண்டு மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற பத்தமடை பாய் ஒன்றினை அவருக்குப் பரிசாக வழங்கினார்.
04-Nov-2026

ShareTweetShareShare

2/

நேபாளத்தின் சோலுக்கும்பு மாவட்டம், பெரிச்சே பகுதியில் தரையிறங்கும்போது மோதிக்கொண்ட பிஷ்டெயில் ஏர் மற்றும் ஏர் டைனாஸ்டி நிறுவனங்களுக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளாவதற்குச் சில வினாடிகளுக்கு முன் எடுக்கப்பட்ட படம் முதலில் உள்ளது.விபத்திற்கு பின் இரண்டு ஹெலிகாப்டர்களும் உருக்குலைந்த நிலையில் மண்ணில் கிடப்பதை இரண்டவாது படம் காட்டுகிறது.இந்த விபத்தில் இரண்டு பேர் இறந்துள்ளனர்.
04-Nov-2026

3/

புதுடில்லி. கலந்தி குஞ் அருகே யமுனை நதியில் உருவாகியுள்ள நச்சு நுரையை அகற்றுவதற்காக, படகில் இருந்தபடி தொழிலாளி ஒருவர் நுரை எதிர்ப்பு வேதிக் கரைசலைத் தெளிக்கிறார்.
04-Nov-2026

4/

புதுச்சேரி பா.ஜ., சார்பில் ‘ஜனநாயகம் காப்போம்–கும்பல் அராஜகத்தை அகற்றுவோம்’ என்ற முழக்கத்துடன், நடந்த கண்டன பேரணியில், மத்திய இணை அமைச்சர் நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா கலந்து கொண்டார். அருகில் தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., முன்னாள் சபாநாயகர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்.,கள் பாஸ்கர், கல்யாண சுந்தரம்.
04-Nov-2026

5/

புதுச்சேரி எஸ்.வி.பட்டேல் சாலை எஸ்.எஸ்.,திருமண மண்டபத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு பல்வேறு பிராண்ட் துணி வகைகள் விற்பனை நடந்து வருகிறது.
04-Nov-2026

6/

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் உள்ள சேதமடைந்த சமூதாய கூட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
04-Nov-2026

7/

மதுரை இ.எஸ்.ஐ.சி., துணை மண்டல அலுவலகத்தில் நடந்த விழிப்புணர்வு வாரப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சி.பி.ஐ., ஊழல்தடுப்பு பிரிவு எஸ்.பி., சந்தோஷ் குமார் பரிசு வழங்கினார். அருகில் இ.எஸ்.ஐ.சி., துணை இயக்குனர் மீனாட்சிசுந்தரம்.
04-Nov-2026

8/

மதுரை புதுார் தேசிய விநாயகர் கோயில் தெருவில் அள்ளப்படாத குப்பையால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
04-Nov-2026

9/

சென்னைஐஐடி வளாகத்தினுள் மரம் செடிகளுக்கு இடையே கூட்டமாக ஓய்வெடுக்கும் புள்ளி மான்கள். இடம்: கிண்டி
04-Nov-2026

10/

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் இந்திய கம்யூ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
04-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us