மலர் அலங்காரத்தில் ஆதி காமாட்சி காமாட்சியம்மன் அவதரித்த ஐப்பசி மாத பூரம் நட்சத்திரத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் ஆதிகாமாட்சி என, அழைக்கப்படும் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில், லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சியம்மன் நேற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தீபாவளி போன்ற முக்கியப் பண்டிகைக் காலங்களில் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதால், ராணுவப் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.முன்னாள் வரும் வீரர் இருட்டிலும் ஊடூருவி பார்க்கக்கூடிய நைட் விஷன் கண்ணாடி அணிந்துள்ளார். இடம்:அக்னுார்,காஷ்மீர்.
டில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பனிமூட்டத்துடன், காற்று மாசுவும் சேர்ந்ததால், பார்வை துாரம் குறைந்துள்ளது. இதனால், வாகனங்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன. இடம்: ஜஹாங்கிர்புரி – பால்ஸ்வா பகுதி.
ஆட்டோ ஓட்டுநர்கள் தடுப்பதால், புதுச்சேரி நகராட்சி சார்பில் இயக்கப்பட்ட இ. ஆட்டோக்கள் வம்ப கீரப்பாளையத்தில் உள்ள நகராட்சி பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ள காட்சி.