வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலையில் பயணிகள் ஆபத்தான நிலையில் கடப்பதை தவிர்க்க நடை மேம்பாலம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது இடம் : வேளச்சேரி
மலர் அலங்காரத்தில் ஆதி காமாட்சி காமாட்சியம்மன் அவதரித்த ஐப்பசி மாத பூரம் நட்சத்திரத்தையொட்டி, காஞ்சிபுரத்தில் ஆதிகாமாட்சி என, அழைக்கப்படும் ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில், லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சியம்மன் நேற்று சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தீபாவளி போன்ற முக்கியப் பண்டிகைக் காலங்களில் எல்லைப் பகுதிகளில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் நடக்க வாய்ப்புள்ளதால், ராணுவப் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.முன்னாள் வரும் வீரர் இருட்டிலும் ஊடூருவி பார்க்கக்கூடிய நைட் விஷன் கண்ணாடி அணிந்துள்ளார். இடம்:அக்னுார்,காஷ்மீர்.