விருத்தாசலம் அடுத்த ஆலடி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா எம்.எல்.ஏ., மாணவ, மாணவியுடன் மத்தாப்பு கொளுத்தி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி குமரகுருப்பள்ளம் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ரவுடி வீடுகளில் பெரிய கடை இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் இரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, நாடு முழுதும் உள்ள முருகன் கோவில்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் காப்பு கட்டி தங்களது விரதத்தைத் தொடங்கினர். வருகின்ற 15ம் தேதி சூரசம்ஹார நிகழ்வோடு விரதம் நிறைவுபெறும். சென்னை பூங்கா நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற கந்தக்கோட்டம் முத்துக்குமாரசாமி கோவிலில், சுவாமி சிறப்பு ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.