திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் ஏழாம் நாள் நடைபெறும் தேரோட்டத்தில், தேர் சக்கரங்களுக்கு கட்டை போடும் மிராசுதாரர்களிடம் கோவில் இணை ஆணையர் பரணிதரன் ஆலோசனை நடத்தினார்.
சத் பூஜையை(சூரியனை வணங்கும் திருநாள்)கொண்டாடத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் ரயில்களின் ஜன்னல் வழியாக ஏறும் பயணிகள்
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள திகாரு ரயில் நிலையத்தில், தடம் புரண்டு சேதமடைந்த பயணிகள் ரயிலின் பெட்டிகளை மீட்புப் படையினரும் ரயில்வே அதிகாரிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
தாம்பரத்தில் பேருந்துகளை பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் குறுகலான ஜி.எஸ்.டி சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசலில் அவதிப்படும் வாகன ஓட்டிகள்.