பிறநாட்டு மன்னர்கள் குதிரைகளில் படையெடுத்து வந்து மதுரையை ஆக்கிரமித்தது அந்த காலம். குதிரைகள் மட்டும் ‘படையெடுத்து’ ஆக்கிரமிப்பது இந்த காலம். இடம்: புட்டுத்தோப்பு வைகை சர்வீஸ் ரோடு.
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள திகாரு ரயில் நிலையத்தில், தடம் புரண்டு சேதமடைந்த பயணிகள் ரயிலின் பெட்டிகளை மீட்புப் படையினரும் ரயில்வே அதிகாரிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
தாம்பரத்தில் பேருந்துகளை பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல் குறுகலான ஜி.எஸ்.டி சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் நாள்தோறும் கடும் போக்குவரத்து நெரிசலில் அவதிப்படும் வாகன ஓட்டிகள்.