அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள திகாரு ரயில் நிலையத்தில், தடம் புரண்டு சேதமடைந்த பயணிகள் ரயிலின் பெட்டிகளை மீட்புப் படையினரும் ரயில்வே அதிகாரிகளும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
லண்டன் பார்லிமெண்டில் வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் பங்குதாரர் தங்கமலர் ஜெகநாத்துக்கு சிறப்பு கெளரவம். வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் பங்குதாரரான தங்கமலர் ஜெகநாத்,இந்திய வர்த்தக கூட்டமைப்பின் அழைப்பை ஏற்று, லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஹவுஸ் ஆப் காமன்ஸ் அரங்கில் கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற இந்திய வணிக சிறப்பு விருதுகள் வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் அங்கு அவர் விருது வழங்கி கெளவிக்கப்பட்டார்..
மதுரை ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தில் புதிய கிளான்ஸா காரை மதுரை அரசு மருத்துவமனை முன்னாள் டீன் மருது பாண்டியன் அறிமுகப்படுத்தினார். அருகில் நிறுவன நிர்வாகிகள், ஊழியர்கள்.
தேசப் பாதுகாப்பில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களைத் தங்கள் சகோதரர்களாகப் பாவித்து, ‘பாய் தூஜ்’(சகோதரருக்கான நாள்) பண்டிகையான நேற்று உள்ளூர் பெண்கள் ராணுவ வீரர்களின் நெற்றியில் திலகமிட்டு, அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வாழ்த்தினர்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் திருவெண்ணைநல்லூர் பஸ் நிற்கும் இடத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பயணிகள் இருளில் காத்திருந்து சிரமப்படுகின்றனர்.
சத் பூஜையை(சூரியனை வணங்கும் திருநாள்)கொண்டாடத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக, பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் ரயில் நிலையத்தில் ரயில்களின் ஜன்னல் வழியாக ஏறும் பயணிகள்