ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மூவர் காயமடைந்ததைத் தொடர்ந்து, தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள புகழ்பெற்ற லால் சவுக் மணிக்கூண்டு அருகே பாதுகாப்புப் படையினர் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கந்த சஷ்டி மூன்றாம் நாளில், திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணிய சுவாமி மஞ்சள் நிற பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.