கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நகர காவல் தெய்வ வழிபாட்டின் முதல் நாளான நேற்று, திருவண்ணாமலை கிரிவலப் பாதை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோவில் வாசலில் வள்ளி கும்மி நடனம்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவின் மூன்றாவது நாளான்று( நவம்பர் 12) கோவில் வளாகத்தில் வள்ளி கும்மி நடனம் நிகழ்ச்சி நடந்தது.