தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, கோவை பட்டேல் ரோடு காளீஸ்வர நகர் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
13-Nov-2026

ShareTweetShareShare

2/

சென்னை கேகேநகரில் உள்ள ஸ்பிரிங்பீல்டு மேல்நிலைப்பள்ளியில்,குழந்தைகளிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் வாசிப்பு நிகழ்வு நடந்தது. இதில் தினமலர் பட்டம் இதழை வாசித்த மாணவர்கள்.
13-Nov-2026

3/

குழந்தைகள் தினத்திற்கு வழங்கப்பட்ட கேக்கை, பரிமாற்றி , உண்ணும் குழந்தைகள். இடம்: மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, கவுண்டம்பாளையம் ராமசாமி நகர், கோவை
13-Nov-2026

4/

திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் கந்த சஷ்டி விழாவின் நான்காம் நாளானஇன்று( நவம்பர் 13) காவடி மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகன்.
13-Nov-2026

5/

நவம்பர் 24 அன்று கார்த்திகை தீபத்திருநாளில், திருவண்ணாமலையில் 2,668 அடி உயர உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்ற பயன்படுத்த, 4,500 கிலோ நெய், ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
13-Nov-2026

6/

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மூன்றாம் பிரகாரத்தில், வீதி உலாவிற்காக சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படும் திருக்கல்யாண மண்டபத்தில் வண்ண வண்ண தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளது.
13-Nov-2026

7/

கார்த்திகை தீப விழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்னையை சேர்ந்த சமர்பன டிரஸ்ட் சார்பில் 5 திருக்குடைகள் காணிக்கை செலுத்திய பக்தர்கள்.
13-Nov-2026

8/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை திருவிழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி., மகேஷ் குமார் அகர்வால் நேரில் ஆய்வு செய்தனர். உடன் கூடுதல் டி.ஜி.பி., அன்பு உட்பட பலர்.
13-Nov-2026

9/

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, கோவில் காவல் தெய்வ வழிபாட்டின் 2ம் நாளில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் பிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
13-Nov-2026

10/

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பட்டேல்ரோடு காளீஸ்வர நகர் அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
13-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us