சென்னை கிண்டி வெங்கடாபுரம் பகுதியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவனம் அமைக்கப்பட உள்ளது. 9.40 ஏக்கர் நிலத்தில் 83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11 தளங்கள் அடங்கிய இந்நிறுவனத்திற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதுதான் அதன் மாதிரி வரைபடம்.
மாதவரம்- சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் கொளத்தூர்- சீனிவாச நகர் இடையே சுரங்கம் தோண்டும் பணியை குறிஞ்சி என்ற ராட்சத இயந்திரம் வெற்றிகரமாக முடித்து வெளியேறியது. மொத்தம் 1080 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டி உள்ளது.
சென்னை கேகேநகரில் உள்ள ஸ்பிரிங்பீல்டு மேல்நிலைப்பள்ளியில்,குழந்தைகளிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் வாசிப்பு நிகழ்வு நடந்தது. இதில் தினமலர் பட்டம் இதழை வாசித்த மாணவர்கள்.
திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் கந்த சஷ்டி விழாவின் நான்காம் நாளானஇன்று( நவம்பர் 13) காவடி மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த முருகன்.
நவம்பர் 24 அன்று கார்த்திகை தீபத்திருநாளில், திருவண்ணாமலையில் 2,668 அடி உயர உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்ற பயன்படுத்த, 4,500 கிலோ நெய், ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு கோவில் வளாகத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மூன்றாம் பிரகாரத்தில், வீதி உலாவிற்காக சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படும் திருக்கல்யாண மண்டபத்தில் வண்ண வண்ண தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை திருவிழா வரும் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஜி.பி., மகேஷ் குமார் அகர்வால் நேரில் ஆய்வு செய்தனர். உடன் கூடுதல் டி.ஜி.பி., அன்பு உட்பட பலர்.