ஊட்டியில் , மகிளா நீதிமன்றம் சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மகிளா நீதிபதி செந்தில்குமார் மற்றும் எஸ்.பி., பிருந்தா துவக்கி வைத்தனர்.
புதுச்சேரி அரசு நாவலர் நெடுஞ்செழியன் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு அமைச்சர் சிவக்கொழுந்து இலவச சைக்கிள்களை வழங்கினார்.
சென்னை கிண்டி வெங்கடாபுரம் பகுதியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நிறுவனம் அமைக்கப்பட உள்ளது. 9.40 ஏக்கர் நிலத்தில் 83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11 தளங்கள் அடங்கிய இந்நிறுவனத்திற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதுதான் அதன் மாதிரி வரைபடம்.
மாதவரம்- சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் கொளத்தூர்- சீனிவாச நகர் இடையே சுரங்கம் தோண்டும் பணியை குறிஞ்சி என்ற ராட்சத இயந்திரம் வெற்றிகரமாக முடித்து வெளியேறியது. மொத்தம் 1080 மீட்டர் நீளத்திற்கு சுரங்கம் தோண்டி உள்ளது.
சென்னை கேகேநகரில் உள்ள ஸ்பிரிங்பீல்டு மேல்நிலைப்பள்ளியில்,குழந்தைகளிடையே வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் வாசிப்பு நிகழ்வு நடந்தது. இதில் தினமலர் பட்டம் இதழை வாசித்த மாணவர்கள்.