சர்வதேச நீரிழிவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அதை முன்னிட்டு, ‘இந்தியாவில் நீரிழிவு நோய் குறித்த ஆய்வுச் சங்கம்’ டில்லி இந்தியா கேட் பகுதியிலிருந்து நடத்திய விழிப்புணர்வு நடைப்பயணத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சின்ன காஞ்சிபுரம் மணிகண்டீஸ்வரர் கோவிலில் நேற்று நடந்த விளக்கு பூஜையில், பால விநாயகர், பாலமுருகனுடன், அய்யப்ப சுவாமி, புலிவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பூர், சமூக நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளித்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து கருத்தரங்கம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை குறை கேட்பு முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை தாசில்தார் ரமேஷ் பெற்றுக் கொண்டார்.
அண்ணாச்சி பழ இலையில் இருந்து நூல் தயாரிக்கும் முறையை கண்டுபிடிக்கும் ரசாயன கலவையுடன் கோவை சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி மாணவர்கள் முத்துராஜ் மற்றும் ஹரிஷ்.