தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திண்டுக்கல் மேட்டுராஜக்காப்பட்டி சுப்பிரமணியசுவாமி கோவிலில் அருணகிரிநாதருக்கு காட்சி தரும் அலங்காரத்தில் சுவாமி.
14-Nov-2026

ShareTweetShareShare

2/

காந்திபுரம் செம்மொழி பூங்காவில் மாநகராட்சி சார்பில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு குறித்து விழிப்புணர்வு ரங்கோலி கோலம் போடப்பட்டது.
14-Nov-2026

3/

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் தமிழ்நாடு ஏஐடியூசி உழைக்கும் பெண்கள் அமைப்பு சார்பில் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம் எல் ஏ., அருள் விக்னேஷ்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
14-Nov-2026

4/

விழுப்புரம் சிக்னல் அருகே உள்ள ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 5வது நாளையொட்டி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
14-Nov-2026

5/

பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 101 வது பிறந்த நாள் வைபவத்தை முன்னிட்டு உலகளாவிய 24 மணி நேர தொடர் அகண்ட பஜன் நிகழ்ச்சி கோவை ரேஸ் கோர்ஸ், சாயி சைதன்யம் ஸ்ரீ சத்ய சாயி மந்திரில் துவங்கியது.
14-Nov-2026

6/

‘அக்வான்’ புயல் எதிரொலி: நங்கூரமிடப்பட்ட படகுகள் ‘அக்வான்’ புயல் முன்னெச்சரிக்கை காரணமாக, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளைக் கடற்கரையோரம் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.
14-Nov-2026

7/

திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலை பகுதியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நடந்த சைக்கிள் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்று சீறிபாய்ந்த சிறுவர்கள்.
14-Nov-2026

8/

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த அருணாச்சல ஆன்மீக சேவை சங்கம் சார்பில், சுவாமிக்கு 15 குடைகள் காணிக்கையாக கொடுக்கும் ஊர்வலத்தில் விநாயகர், சிவன் பார்வதி, முருகர் வேடமிட்டு நடனம் ஆடி அனைவரும் வெகுவாக கவர்ந்தனர்.
14-Nov-2026

9/

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் வினை தீர்க்கும் வேலவர் கோயிலில் சஷ்டி வழிபாடு நடந்தது.
14-Nov-2026

10/

ராமநாதபுரம் நாடார் தெருவை ஆக்கிரமித்த டூவீலர்களால் அவசர ஊர்திகள் செல்ல முடியாமல் திணறுகின்றனர்.
14-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us