விழுப்புரம் சிக்னல் அருகே உள்ள ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 5வது நாளையொட்டி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
சென்னை புளியந்தோப்பு சுந்தராபுரம் பகுதியில் பேசின் பிரிட்ஜ் சாலையில் புழுதிகள் அதிகம் பறப்பதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் தமிழ்நாடு ஏஐடியூசி உழைக்கும் பெண்கள் அமைப்பு சார்பில் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய எம் எல் ஏ., அருள் விக்னேஷ்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 101 வது பிறந்த நாள் வைபவத்தை முன்னிட்டு உலகளாவிய 24 மணி நேர தொடர் அகண்ட பஜன் நிகழ்ச்சி கோவை ரேஸ் கோர்ஸ், சாயி சைதன்யம் ஸ்ரீ சத்ய சாயி மந்திரில் துவங்கியது.
‘அக்வான்’ புயல் எதிரொலி: நங்கூரமிடப்பட்ட படகுகள் ‘அக்வான்’ புயல் முன்னெச்சரிக்கை காரணமாக, சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளைக் கடற்கரையோரம் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலை பகுதியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், நடந்த சைக்கிள் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்று சீறிபாய்ந்த சிறுவர்கள்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த அருணாச்சல ஆன்மீக சேவை சங்கம் சார்பில், சுவாமிக்கு 15 குடைகள் காணிக்கையாக கொடுக்கும் ஊர்வலத்தில் விநாயகர், சிவன் பார்வதி, முருகர் வேடமிட்டு நடனம் ஆடி அனைவரும் வெகுவாக கவர்ந்தனர்.