முத்தியால்பேட்டை ஸ்ரீ சுந்தர விநாயகர் சுப்பிரமணிய சாமி சித்திவிநாயகர் கோயில் கந்த சஷ்டி விழா ஐந்தாம் நாள் விழாவில், சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஹிமாச்சல பிரதேசத்தின் குலு மற்றும் மணாலி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ரோஹ்தாங் கணவாயில் புதிய பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து, அப்பகுதி வெள்ளை போர்வை போர்த்தியது போல ரம்மியமாக காட்சி அளித்தது.
மேற்காசிய நாடான ஓமனின் அல் அமரத்தில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் கடைசி பந்தில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் இளம் இந்திய வீரர்கள்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணி வீட்டில் சிறுமிகளின் சடலம் உள்ளதாக தகவல் வந்ததை எடுத்து போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் அவரது வீட்டில் ஜே.சி.பி. உபகரணங்களுடன் தோன்டி சோதனை மேற்கொண்டனர்.