டில்லி சண்முகானந்த சங்கீத சபா மற்றும் சுவாமிநாத சுவாமி சேவா சமாஜம் இணைந்து, டில்லி ராமகிருஷ்ணாபுரம் உத்தர சுவாமிமலை கோவிலில் நடத்திய கந்த சஷ்டி விழாவில், ஸ்ரீதர் கர்நாடக இசைக் கச்சேரி நடத்தினார். சித்தேஷ் கணேஷ் – வயலின், ராதுல் குமார் – மிருதங்கம் வாசித்தனர். சமாஜம் துணைத் தலைவர் சுவாமிநாதன், சபா கவுரவ செயலர் கிருஷ்ணசுவாமி ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு ஒத்தக்கால் மண்டபம் மேம்பாலத்தின் கீழ் நெடுஞ்சாலைத்துறையின் வழிகாட்டி அறிவிப்பு பலகையை மறைத்து வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பரப் பலகை.
திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் விளக்கேற்றி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.