மதுரை கருப்பசாமி குரூப் ஆப் ரைஸ் மில்ஸ் இல்ல திருமண விழாவில் மணமக்கள் விஷால் கவுஷிக் - தேவியுடன் இடமிருந்து மணமகளின் சகோதரர் டாக்டர் பாரி, தந்தை டாக்டர் ராஜ்குமார், தாயார் செல்வி, மணமகனின் தந்தை குரு, தாயார் லதா, சகோதரர் ஸ்ரெனிக்.
ஊசி மாலை சாமியோவ்.! இன்று துவங்கும் கார்த்திகை தினத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிக்க காரமடை நரிக்குறவர்கள் சங்கத்தினர் விற்பனைக்கு வைத்துள்ள பலவிதமான பாசி மாலைகள். இடம்: சித்தாபுதூர் ஐயப்பன் கோயில்.
சிவகங்கை அருகே கொல்லங்குடியில் வசந்தம் பேலஸ் திருமண மண்டபத்தை பேராசிரியர் (ஓய்வு) பாஸ்கரன் திறந்துவைத்தார். அருகில் (இடமிருந்து) உரிமையாளர் பாண்டி, கண்ணாத்தாள், பேராசிரியரின் மனைவி பிரபாவதி.
திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி கவசம் விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சூரபத்மனை வதம் செய்யும் காட்சி.