புதுச்சேரி மாநில புகையிலை கட்டுப்பாட்டு மையம் சார்பில் புதுச்சேரி மிஷன் வீதியில் புகையிலை பொருட்கள் விற்பதற்கு தடை விதித்து வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.
செவிலிய அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கவர்னர்- மற்றும் தலைமை செயலருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் சங்கத் தலைவர் கனிலா குமாரி தலைமையில் நடந்தது.
மரங்கள் வெட்டப்படுவரும் நிலையில் இயற்கையை பாதுகாக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் இந்து நடுநிலைப் பள்ளி மாணவர்கள் விதைப்பந்துகளை தயாரித்து குளங்களின் கரைகள், சாலை ஓரங்களில் வீசினர்...
கார்த்திகை மாதம் துவங்கிய நிலையில் பூக்களின் விற்பனை சூடுபிடிக்க துவங்கியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பாலாமடையில் பயிரிடப்பட்டுள்ள சாமந்தி பூக்களை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.....
லாஸ்பேட்டையில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக சமுதாய கல்லூரியின் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக நில அளவை துறை அதிகாரிகள் டிஜிட்டல் நில அளவுக்கோல் மூலம் நிலத்தை அளவீடு செய்தனர்.
மதுரை கருப்பசாமி குரூப் ஆப் ரைஸ் மில்ஸ் இல்ல திருமண விழாவில் மணமக்கள் விஷால் கவுஷிக் - தேவியுடன் இடமிருந்து மணமகளின் சகோதரர் டாக்டர் பாரி, தந்தை டாக்டர் ராஜ்குமார், தாயார் செல்வி, மணமகனின் தந்தை குரு, தாயார் லதா, சகோதரர் ஸ்ரெனிக்.
ஊசி மாலை சாமியோவ்.! இன்று துவங்கும் கார்த்திகை தினத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிக்க காரமடை நரிக்குறவர்கள் சங்கத்தினர் விற்பனைக்கு வைத்துள்ள பலவிதமான பாசி மாலைகள். இடம்: சித்தாபுதூர் ஐயப்பன் கோயில்.