சென்னை அரசு யோகா, இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 9வது இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு , நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இடம்: அரும்பாக்கம்.
மெரினா கடற்கரையில் பள்ளி சீருடையில் சுற்றி திறந்த மாணவ மாணவிகளை சிங்கப்பெண் மற்றும் போலீசார் பிடித்து விசாரித்து பெற்றோர்களை வரவைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
புயல் எச்சரிக்கை காரணமாக மீனவர்கள் தங்களது பைபர் படகுகளை கிரேன் உதவியுடன் பத்திரப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடம்: சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகம்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.