சென்னை நகரில் காய்ச்சல் நோய் தொற்று அதிகம் பரவி வரும் நிலையில் கூவம் ஆறு, உள்ளிட்ட கால்வாய்களில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் பணி நடந்தது. இடம்: பூங்கா ரயில் நிலையம் அருகே உள்ள கூவம் ஆறு.
திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகே கிழக்கு ரத வீதியில் தீபாவளியை முன்னிட்டு அமைக்கப்பட்ட கண்காணிப்பு கோபுரம் பல நாட்களாக அகற்றாமல் உள்ளதால் இடையூறு ஏற்படுகிறது.
விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் சன்னதியில் கார்த்திகை மாதம் முன்னிட்டு ஐயப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து கொண்டனர்.