புதுச்சேரி எல்லைப்பிள்ளை சாவடியில் மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தில் கட்டப்பட்ட நீச்சல்குளம் பராமரிப்பு இன்றி தண்ணீரில் பாசி படர்ந்து பாழடைந்து நிலையில் உள்ளது.
முறையான பராமரிப்பு இல்லாமல் கீழ்க்கட்டளை ஏரி முழுவதும் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் அழுகி மஞ்சள் நிறத்தில் மாறியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இடம்:கீழ்க்கட்டளை.
நெருங்கிவரும் ‘அக்வான்’ புயலின் தாக்கத்தால் பயிர்கள் சேதமடையக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, மேற்கு வங்கம் நடியா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்த நெல்மணிகளை உடனடியாகத் திரட்டிக் காப்பாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அமைக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் வெறும் காட்சி பொருளாக கிடக்கும் கோவை சுந்தராபுரம் பதிவாளர் காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா.
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோவை, குட் ஷெட் ரோடு தபால் நிலையத்தில் கருப்பு பட்டை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.