இந்தியா– சீனா இடையே, 1962ம் ஆண்டு நவம்பர் 18ல் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க, ரெசாங் லா போரில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, வீரர்களின் தியாகத்தை போற்றி, டில்லி, பா.ஜ., முதல்வர் ரேகா குப்தா அஞ்சலி செலுத்தினார்.
ஆந்திரப் பிரதேசத்தில் ‘அக்வான்’ புயல் கரையை நெருங்கி வருவதையொட்டி, விசாகப்பட்டினம் கடற்கரைப் பகுதிகளில் பொதுமக்கள் யாரும் கடலோரப் பகுதிக்குச் செல்லாமல் இருக்கத் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் படையினரும் காவல்துறையினரும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 24ஆம் தேதி நடைபெறுகிறது. அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபமானது, 11 நாட்களுக்கு எரியும்; மேலும், 30 கிலோமீட்டர் தூரம் வரை தெரியும். 6 அடி உயரமுள்ள செப்புக் கொப்பரையே மகா தீபத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தீபக் கொப்பரை தற்போது சீரமைக்கப்பட்டு, வழிபாடுகளுடன் தயார் நிலையில் உள்ளது.
திருவள்ளூர் புதிய பஸ் நிலையத்தில் திறந்து மூன்று மாதங்கள் ஆகியும் இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு செட்டுகள் அமைக்காததால் ஏலம் எடுத்தவர்கள் முன்வரவில்லை. வாகனங்கள் மழை வெயிலில் நிற்கும் அவல நிலை
திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலையில் நகராட்சி சார்பில் கொசுக்களால் டெங்கு மலேரியா நோய்கள் பரவாமல் இருக்க வீட்டில் பழைய பொருட்கள் வைக்க வேண்டாம் என்று விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது
ரேடியல் சாலையில் கீழ்க்கட்டளை மேம்பாலம் மேலே சோழிங்கநல்லூர் - பரங்கிமலை வழித்தடத்தின் மெட்ரோ மேம்பாலம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.இடம் : கீழ்க்கட்டளை