அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் அகௌரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள நெடுஞ்சாலையைக் கடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான ‘வாலிஸ் அன்னன்பெர்க் வனவிலங்கு பாலத்தின்’ வான்வழித் தோற்றம்.இதுவே உலகின் மிகப்பெரிய வனவிலங்கு மேம்பாலமாகும்.இங்குள்ள நெடுஞ்சாலையால் வனப்பகுதிகள் துண்டிக்கப்பட்டு, சிறுத்தைகள் , மான்கள், உள்ளிட்ட வனவிலங்குகள் சாலைகளில் அடிபட்டு இறப்பது தொடர்ந்தது. மேலும், விலங்குகள் தனிமைப்படுத்தப்படுவதால் மரபணுப் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டு அழியும் அபாயம் ஏற்பட்டது. இதற்குத் தீர்வாகவே இப்பாலம் உருவாக்கப்பட்டுள்ளது
முறையான பராமரிப்பு இல்லாமல் கீழ்க்கட்டளை ஏரி முழுவதும் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் அழுகி மஞ்சள் நிறத்தில் மாறியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இடம்:கீழ்க்கட்டளை.
நெருங்கிவரும் ‘அக்வான்’ புயலின் தாக்கத்தால் பயிர்கள் சேதமடையக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, மேற்கு வங்கம் நடியா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வயல்களில் அறுவடை செய்த நெல்மணிகளை உடனடியாகத் திரட்டிக் காப்பாற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
அமைக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் வெறும் காட்சி பொருளாக கிடக்கும் கோவை சுந்தராபுரம் பதிவாளர் காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா.
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோவை, குட் ஷெட் ரோடு தபால் நிலையத்தில் கருப்பு பட்டை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.