அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோவை, குட் ஷெட் ரோடு தபால் நிலையத்தில் கருப்பு பட்டை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பல நாட்கள் ஆகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் வெறும் காட்சி பொருளாக கிடக்கும் கோவை சுந்தராபுரம் பதிவாளர் காலனி பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்கா.
பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கத்தை, தமிழக முதல்வர் விஜய் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.
ஓய்வூதிய சரிபார்ப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் தமிழ்நாடு ஓய்வூதியர்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இடம்: சிவானந்தா சாலை.
தமிழகத்தில் பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு செல்லாமலே இணையதளம் வாயிலாக புகார் அளித்து ரசீது பெறும் வசதியை தமிழக காவல்துறை டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வால் துவக்கி வைத்தார்.