தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 24ல் நடக்கிறது. அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபமானது, 11 நாட்களுக்கு எரியும். 6 அடி உயரமுள்ள செப்புக் கொப்பரையே மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த தீபக் கொப்பரை தற்போது சீரமைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது.
18-Nov-2026

ShareTweetShareShare

2/

நம் அண்டை நாடான சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஷென்ஷென் நகரில் ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சிமாநாடு நடக்கிறது. இதையொட்டி நடந்த வரவேற்பு விருந்தில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஷீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் புடின்.
18-Nov-2026

3/

வங்கக்கடலில் உருவாகியுள்ள அக்வான் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசாஇடையே நாளை மறுநாள்( நவம்பர் 19) கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், ஆந்திராவின் விசாகப்பட்டினம் கடற்கரை பகுதிகளில் பொது மக்கள் செல்லாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர்.
18-Nov-2026

4/

காஷ்மீரின் குல்காம் மாவட்டம், தேவ்சர் ஜங்கல்போரா கிராமத்தில் ராணுவத்தினருடன் நீண்ட நேரம் நடந்த சண்டையில் லஷ்கர் பயங்கரவாதி லத்தீப் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை வெற்றி சைகை காட்டி கொண்டாடிய ராணுவத்தினர்.
18-Nov-2026

5/

ஊட்டி அருகே எம்.பாலாடா பகுதியில் விவசாயத்துக்கு பயன்பட்டு வந்த ஆறு தூர்வாராத காரணத்தால் ஓடை போல மாறியதால், இங்குள்ள விவசாயிகள் கோடை காலத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவமதிப்படும் சூழல்.
18-Nov-2026

6/

கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. உடன் கலெக்டர், வந்தனா கார்க் எஸ்பி உதயகுமார், கோவில் இணை ஆணையர் பரணிதரன் உட்பட பலர்.
18-Nov-2026

7/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் விழாவில் நான்காம் நாள் காலை உற்சவத்தில், தங்க நாக வாகனத்தில் சந்திரசேகர் (உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்) சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர், மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
18-Nov-2026

8/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் திருவிழா நாளை மறுநாள் நடைபெறும் வெள்ளி தேரோட்டத்திற்காக வெள்ளி தேரை சுத்தம் செய்யும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
18-Nov-2026

9/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாள் இரவு உற்சவத்தில் கற்பக விருச்சகத்தில் சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் ராஜகோபுரம் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
18-Nov-2026

10/

திருப்பூர், பி.என்.ரோடு, மேட்டு பாளையம் பஸ்ஸ்டாப் அருகிலுள்ள, ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவை ஒட்டி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
18-Nov-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us