உடல்நலக் குறைவால் உயிரிழந்த கொளத்தூர் தொகுதி தவெக., எம்.எல்.ஏ., வி.எஸ். பாபுவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.,வின் உடலைத் தோளில் சுமந்து சென்றார்.
கேத்தி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மலைகுகை வழியாக குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் வரும் சுற்றுலா பயணிகள், இதமான காற்றில், இயற்கை காட்சிகளை ரசித்த வண்ணம் பயணிக்கும் தருணம். அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத நினைவலைகளை நிச்சயம் பதிவு செய்யும்.
கண்ணுக்கு எட்டிய தொலைவுக்கு பசுமையான தேயிலை எஸ்டேட். இதனிடையே வளைந்த நெளிந்து செல்லும் பாதையில் டீ கோப்பையுடன் போட்டோ எடுக்க வசதியாகவரவேற்கும் செல்பி பாயின்ட். இடம்: மாணிக்கா எஸ்டேட், வரலாறு.
ஒடிசா மாநிலம் புரி கடற்கரைப் பகுதியில் இன்று பகல் 'அக்வான்' புயல் கரையைக் கடக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடலுக்கு அருகில் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதையொட்டி, கடலோரக் கடைகள் பாலிதீன் தாள்களால் மூடப்பட்டுள்ளன.
மஹாராஷ்டிராவில் 1993ம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு களுக்குக் காரணமான தாவூத் இப்ராஹிம் முன்பு வசித்த தன் ஆரம்பகால நடவடிக்கைகளுக்குத் தளமாகப் பயன்படுத்திய பாழடைந்த கட்டடம் நேற்று இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இடம்: பிண்டி பஜார், மும்பை.