விருதுநகரில் கேர்.ஏ.கே.பி.எஸ் மருத்துவமனை, சாரதா சக்தி மெட்ரிக் பள்ளி இணைந்து நடத்திய குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் ரத்தினவேல், நிகில் பரிசு வழங்கினர்.
மதுரை ரிசர்வ்லைன் – வண்டிப்பாதை ரோட்டை ஆக்கிரமித்து டூவீலர்கள் நிறுத்துவதாலும், கடை விளம்பர போர்டுகள் வைப்பதாலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
உடல்நலக் குறைவால் உயிரிழந்த கொளத்தூர் தொகுதி தவெக., எம்.எல்.ஏ., வி.எஸ். பாபுவின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.,வின் உடலைத் தோளில் சுமந்து சென்றார்.
கேத்தி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள மலைகுகை வழியாக குன்னூரில் இருந்து ஊட்டிக்கு மலை ரயிலில் வரும் சுற்றுலா பயணிகள், இதமான காற்றில், இயற்கை காட்சிகளை ரசித்த வண்ணம் பயணிக்கும் தருணம். அவர்கள் வாழ்வில் மறக்க முடியாத நினைவலைகளை நிச்சயம் பதிவு செய்யும்.